மக்களே எச்சரிக்கையாக இருங்கள் , அதிகமாகும் வெப்பம் : எச்சரிக்கும் வானிலை மையம்

By Irumporai Apr 20, 2023 09:25 AM GMT
Report

தமிழகத்தில் இன்றும் நாளையும் தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

அதிகரிக்கும் வெப்பம்

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37-38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 20மற்றும் 21 ஆகிய தேதிகளில் தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது மிதமான மழை பெய்யக்கூடும்.

மக்களே எச்சரிக்கையாக இருங்கள் , அதிகமாகும் வெப்பம் : எச்சரிக்கும் வானிலை மையம் | Temperature Will Rise In Tamil Nadu

மிதமான மழை

22 முதல் 24 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.