இந்த பையன எப்படி சமாளிக்க போறோம்னு தான் தெரியல : தென் ஆப்ரிக்கா கேப்டன் ஓபன் டாக்

By Irumporai Jun 03, 2022 05:26 PM GMT
Report

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கின் பந்தை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பது தெரியவில்லை என்று தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான ஐந்து டி20 உள்ளடக்கிய தொடரின் முதல் போட்டி வருகிற ஜூன் 9ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்திய அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கின் பந்தை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்பது தெரியவில்லை என்று தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்துள்ளார்.

இந்த பையன எப்படி சமாளிக்க போறோம்னு தான் தெரியல :  தென் ஆப்ரிக்கா கேப்டன் ஓபன் டாக் | Temba Bavuma Umran Malik Bowl

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான ஐந்து டி20 உள்ளடக்கிய தொடரின் முதல் போட்டி வருகிற ஜூன் 9ஆம் தேதி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்திய அணியில் தேர்வாகியிருக்கும் இளம் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக்கை தென்ஆப்பிரிக்க வீரர்கள் எப்படி சமாளிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகியுள்ளார்.

உம்ரான் மாலிக் குறித்து டெம்பா பவுமா பேசுகையில்,“தென்ஆப்பிரிக்கா அணி வேகப்பந்து வீச்சாளர்கள் பலரை எதிர்கொண்டு உள்ளது ஆனால் எந்த ஒரு பேட்ஸ்மேன் 150 kmph வேதத்தில் வரும் பந்தை எதிர் கொள்ள விரும்ப மாட்டான், ஆனால் அதற்கான பயிற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு தான் வருகிறோம் .

எங்கள் அணியிலும் 150kmph வேகத்தில் பந்துவீசும் வீரர்கள் உள்ளனர். இது எங்களுக்கு மிகப் பெரும் பலமாக அமையும், ஆனால் இந்திய அணியில் இடம் பெற்றிருக்கும் எளிதாக 150+ வேகத்தில் பந்து வீசும் உம்ரான் மாலிக் மிகவும் திறமையான ஒரு வீரர், இவருடைய ஐபிஎல் அனுபவம் சர்வதேச போட்டியில் பயனுள்ளதாக அமையும் என்று டெம்பா பவுமா பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.