22வயசு நடிகை மாமா'னு கூப்டா; இந்த படத்தில் மகள், அடுத்த படத்தில் அப்படி - 63 வயது நடிகர் பேச்சு!
மகள் கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஸ்ரீலீலாவுடன் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று தெலுங்கு நடிகர் பாலய்யா பேசியுள்ளார்.
நடிகை ஸ்ரீலீலா
'கிஸ்' என்ற கன்னட படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீலீலா (22). தொடர்ந்து பாரதே என்ற படத்தில் நடித்தார். இதனையடுத்து 'பெல்லி சண்டாடி' என்ற படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார்.
தொடர்ந்து தெலுங்கில் 8க்கும் மேற்பட்ட படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். மேலும் மகேஷ் பாபுவின் 'குண்டூர் காரம்' படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார். தற்போது தெலுங்கு திரையுலகின் அதிரடி மன்னன் பாலய்யா என்ற பாலகிருஷ்ணாவின் 'பகவந்த் கேசரி' படத்தில் அவருக்கு மகளாக நடித்துள்ளார் ஸ்ரீலீலா.
அண்மையில் இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பாலய்யாவின் பேச்சு ரசிகர்களிடையே ஏகப்பட்ட ட்ரோல்களுக்கு உள்ளாகியுள்ளது.
பாலய்யா பேச்சு
பாலையா மேடையில் பேசியதாவது "22 வயதே ஆகும் ஸ்ரீலீலா இந்தப் படத்தில் எனக்கு மகளாக நடித்துள்ளார். ஆனால், படப்பிடிப்பு தளத்தில் முழுவதும் மாமா மாமா என்று என்னை அழைத்து வந்தார். அடுத்த படத்தில் இவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும் என விரும்புகிறேன்.
ஆனால், இந்த விருப்பத்தை என் மனைவி மற்றும் மகளிடம் சொல்லும்போது என் மகன் மோக்ஷக்னா, அப்பா நல்லாவே இருக்காது. ஸ்ரீலீலாவுடன் நான்தான் ஜோடி போட்டு நடிக்க போகிறேன்" என மகன் கூறியதாக பாலய்யா மேடையில் பேசி பலரையும் அதிர்ச்சியடைய செய்தார்.
மகளாக நடித்த ஸ்ரீலீலாவுடனே ஜோடி போட்டு நடிக்கப் போவதாக பாலய்யா கூறியிருப்பதை ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.