தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்ட தெலுங்கு பாடகியின் தந்தை உடல் - என்ன நடந்தது?
தெலுங்கு பின்னணி பாடகி ஹரிணி ராவின் தந்தை ஏ.கே.ராவ் பெங்களூரு ரயில் தண்டவாளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார், இது தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலுங்கு பாடகி ஹரிணி ராவின் தந்தை ஏ.கே.ராவ், பெங்களூருவில் யெலஹங்கா மற்றும் ராஜானுகுண்டே இடையே உள்ள ரயில் தண்டவாளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
நவம்பர் 22 ஆம் தேதியன்று அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. அவரது நெற்றி, மணிக்கட்டு மற்றும் கழுத்தில் வெட்டுக் காயங்கள் இருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
மேலும் அவரது உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இருந்து கத்தி மற்றும் ஒரு ஜோடி கத்தரிக்கோல் ஆகியவற்றை மீட்டுள்ளனர். இதனையடுத்து பெங்களூரு நகர ரயில்வே போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஹைதராபாத் ஸ்ரீநகர் காலனியில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த ஏ.கே.ராவ், வணிகப் பயணமாக நவம்பர் 13ஆம் தேதி முதல் பெங்களூருவில் இருந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
கடைசியாக நவம்பர் 19ஆம் ராவ் தேதி தன்னிடம் பேசியதாக ஹரிணியின் சகோதரி போலீஸிடம் கூறினார். நவம்பர் 21ஆம் தேதி ஹோட்டலில் இருந்து வாகனத்தை முன்பதிவு செய்த ஏ.கே.ராவின் உடல், மறுநாள் ரயில் தண்டவாளத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.