வனிதாவை தொடர்ந்து அடுத்த தாக்குதல்..வன்முறையை தூண்டுகிறதா பிக் பாஸ் நிகழ்ச்சி..?
சில வாரங்கள் முன்பு வனிதா விஜயகுமார் தான் தாக்கப்பட்டதாக வெளியிட்ட பதிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
பிக் பாஸ் வன்முறை
இந்தியாவின் அநேக மொழிகளில் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது பிக் பாஸ் நிகழ்ச்சி. ஒவ்வொரு ரசிகருக்கு அவருக்கு பிடித்தமான போட்டியாளரே வெல்ல வேண்டும் என்ற எண்ணம் எளிதாக தோன்றுவதை தவறில்லை என்று கூறினாலும், அதனை தாண்டி சமூகவலைத்தளங்களில் மற்றொரு போட்டியாளரை மீது கோபத்தை வெளிப்படுத்துவது என்பது தவறான செயலே ஆகும்.
ஆனால் சமீபக்காலமாக பிக் பாஸ் போட்டியாளர்கள் தாக்கப்படுவது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகின்றது. தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளரும் நடிகையுமான வனிதா விஜயகுமார் ரசிகர்களால் தாக்கப்பட்டதாக கூறி பதிவுகளை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டார்.
தாக்குதல்
அந்த சம்பவமே பெரும் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அதே போல தற்போது மற்றொரு சம்பவம் நடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் சீசன் 7 தெலுங்கு நிகழ்ச்சி நேற்று முடிவுக்கு வந்தது. இந்த நிகழ்ச்சியில் யூடியூப் மூலம் பிரபலமான பல்லவி பிரஷாந்த் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டு டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.
Pallavi prashant fans extreme violent behavior towards amardeep car abusing bad words nonstop in background #biggbosstelugu7
— telugu guy (@nthony_venky) December 17, 2023
Police should take action on these fellows pic.twitter.com/zjKTveegeL
இதில், இரண்டாவது இடம் பிடித்த அமர்தீப் என்பவருக்கும் பல்லவி பிரஷாந்த்த்துக்கு இடையே மிகப்பெரிய போட்டி நிலவியுள்ளது. நிகழ்ச்சி நிறைவுபெற்று அமர்தீப் தனது காரில் வீட்டிற்கு சென்ற போது, பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் அவரின் காரை முற்றுகையிட்டு தாக்கியுள்ளனர்.
தாக்கியது மட்டுமின்றி அங்கிருந்து தப்பித்து செல்ல முயற்சித்த போது, காரை துரத்திக்கொண்டும் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோக்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி தற்போது பெரும் விமர்சனத்தை பெற்றுள்ளது.