பிரபல தெலுங்கு நடிகர் மறைவு - சோகத்தில் மூழ்கிய திரையுலகம்
தெலுங்கு திரையுலகின் பிரபல குணசித்திர நடிகர் ராஜா பாபு நேற்று இரவு காலமானார். கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் இருந்த ராஜா பாபு நேற்று காலமாகியுள்ளார்.
ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நரசபுபேட்டாவில் ஜூன் 13, 1957 அன்று பிறந்தவர் ராஜபாபு. 1995ஆம் ஆண்டு ஊறிக்கி மொனகாடு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான ராஜா பாபு இதுவரை 60க்கும் மேற்பட்ட படங்களில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
'சிந்தூரம்', 'சமுத்திரம்', 'முராரி' 'ஆடுவரி மாதலக்கு அர்த்தலே வேறே,' 'சீதம்மா வாக்கிட்லோ சிரிமல்லே செட்டு,' 'கல்யாண வைபோகமே' 'பிரமோத்சவம்' 'பாரத் அனே' உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார்.
திரைப்படங்கள் தவிர ராஜபாபு 'வசந்த் கோகிலா' 'ராதா மது' போன்ற தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு அம்மா சீரியலில் நடித்ததற்காக நந்தி விருது பெற்றார்.
இந்நிலையில் உடல்நலக்குறைவால் ராஜபாபு காலமானதை அடுத்து அவருக்கு தெலுங்கு சினிமா நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.