பிரபல தெலுங்கு நடிகர் காலமானார் : சோகத்தில் திரையுலகம்

Death
By Irumporai Sep 11, 2022 04:29 AM GMT
Report

பிரபல தெலுங்கு நடிகர் கிருஷ்ணம் ராஜூ உடல் நலக் குறைவினால் காலமானார்.

தெலுங்கு நடிகர் காலமானர்

தெலுங்கு சினிமாவில் ரெபெல் ஸ்டார் என்று அழைக்கப்படும் கிருஷ்ணம் ராஜு ,தெலுங்கு சினிமாவில் 183 படங்களுக்கு மேல் இவர் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவில் இவரை ரசிகர்கள் ரெபெல் ஸ்டார் என்று அழைப்பார்கள். நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முக தன்மை கொண்டவர்.

பிரபல தெலுங்கு நடிகர் காலமானார் : சோகத்தில் திரையுலகம் | Telugu Actor Krishnam Raju Passed

பிரபலங்கள் இரங்கல்

5 ஃபில்ம் பேர் விருது, 3 நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். தற்போது 82 வயதான நிலையில் நடிகர் கிருஷ்ணம் ராஜூ உடல்நலக்குறைவால்ஹைதராபாத் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

பிரபல தெலுங்கு நடிகர் காலமானார் : சோகத்தில் திரையுலகம் | Telugu Actor Krishnam Raju Passed

கிருஷ்ணம் ராஜு மறைவுக்கு சினிமா பிரபலங்கள் அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.