மலர் மாலைக்கு பதிலாக மாஸ்க் மாலை... விநோதமான கல்யாண நிகழ்ச்சி!
இந்தியாவில் கொரோனா 2 வது அலை வேகமகா பரவி வருவதால் வீட்டில் நடக்க கூடிய திருமணங்கள் பிரமாண்டம்கா நடைபெறுவது இல்லை .
சமூக இடைவெளியுடன் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் கால சூழ்நிலையை அடையாளப்படுத்தும் வகையில் சம்பிரதாய திருமணம் ஒன்று நேற்று நடைபெற்றது.
தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தை சேர்ந்த ரவிகாந்த்,சர்ஜனா ஆகியோருக்கு திருமணம் நடத்த பெரியோர்களின் செய்திருந்தனர்.
அப்போது நண்பர்கள் வழங்கிய ஆலோசனையின் பேரில் கால சூழ்நிலையை தெளிவுபடுத்தி பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் முக கவசங்களை கொண்டு தயார் செய்யப்பட்ட மாலைகளை இரண்டு பேரும் மாற்றி திருமணம் செய்து கொண்டனர்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக குறைந்த எண்ணிக்கையில் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.