ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்டம் போட்ட செவிலியர் - வீடியோவால் அடுத்து நடந்த ஆப்பு
dance
nurse
telengana
video viral
By Anupriyamkumaresan
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஆரம்ப சுகாதாரநிலையத்தில் சினிமா பாடலுக்கு நடனமாடிய செவிலியரின் வீடியோவுக்கு பலரும் அவர்களது கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
ராஜண்ண சிறிசில்லா மாவட்டத்தில் உள்ள தங்கலைப்பள்ளி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தின் போது செவிலியர் ஒருவர் நடனமாடினார்.

தெலுங்கில் பிரபலமடைந்த புல்லட் வண்டியில் வருகிறான், புட்டு புட்டு என்ற சத்தத்துடன் என்கிற பாடலுக்கு அவர் நடனமாடிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவிற்கு கடும் கண்டனம் தெரிவித்த மாவட்ட மருத்துவ அதிகாரி செவிலியருக்கு மெமோ வழங்கியுள்ளார். மேலும், இதற்கு செவிலியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.