பலே ஐடியா: தந்தை கண்முன்னே கடத்தல்.. கடைசியில் அப்பாவுக்கு ட்விஸ்ட் வைத்த மகள் - பகீர்!

Marriage Crime
By Sumathi Dec 21, 2022 06:21 AM GMT
Report

தந்தையை அடித்து மகளை காரில் கடத்திச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மகள் கடத்தல்

தெலுங்கானா, முட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்திரய்யா. இவர் தனது மகள் ஷாலினியுடன் அதிகாலை அதே ஊரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்றுள்ளார். அதன் பின் இருவரும் கோவிலில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தனர்.

பலே ஐடியா: தந்தை கண்முன்னே கடத்தல்.. கடைசியில் அப்பாவுக்கு ட்விஸ்ட் வைத்த மகள் - பகீர்! | Telangana Young Girl Kidnapped By Lover Marriage

அப்போது அங்கு காருடன் காத்திருந்த நான்கு பேர் கொண்ட கும்பல், சந்திரய்யாவை தள்ளிவிட்டு ஷாலினியை காரில் கடத்தி சென்றனர். தொடர்ந்து, பைக்கில் அவர்களை பாலோ செய்து விரட்டி பிடிக்க முடியவில்லை.

அதிர்ச்சி வீடியோ

அதனையடுத்து போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதனை வைத்து 4 பேரையும் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கடத்தப்பட்ட ஷாலினி திருமணக் கோலத்தில் பகீர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் தானும் ஜான் என்பவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருவதாகவும், தங்கள் காதலை குடும்பத்தினர் ஏற்காததால் திட்டம்போட்டு கடத்தல் நாடகத்தை அரங்கேற்றியதாகவும் தெரிவித்துள்ளார்.