தனது சாவை முன்பே அறிந்த டாக்டர் செய்த செயல் - மனதை உருக்கும் நெகிழ்ச்சி சம்பவம்!
தனது மரணத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்ட மருத்துவர் செய்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நுரையீரல் புற்றுநோய்
தெலங்கானா, கம்மன் பகுதியைச் சேர்ந்த மருத்துவர் ஹர்ஷவர்தன்(34). இவர் ஆஸ்திரேலியாவில் மருத்துவராக பணியாற்றி வந்தார். 2020ல் இவருக்கு திருமணாம் நடந்துள்ளது. தொடர்ந்து, மனைவியை அங்கு அழைத்துச் செல்ல தீவிர முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், ஜிம்மில் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர் திடிரென ரத்த வாந்தி எடுத்துள்ளார். அதனையடுத்து பரிசோதனை செய்ததில் நுரையீரல் புற்றுநோய் இருப்பதை கண்டறிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து, அவர் மனம் தளராமல் தான் மரணிக்க போவது அறிந்து மனைவியிடம் பேசி உடனே விவாகரத்து பெற்றுள்ளார்.
நெகிழ்ச்சி
மேலும், அவருக்கு தேவையான பொருளாதார ஏற்பாடுகளையும் இன்சூரன்ஸ் மூலம் செய்து கொடுத்துள்ளார். மகனுக்கு புற்றுநோய் இருப்பதை அறிந்த பெற்றோர் சிகிச்சைக்காக இந்தியா வரச் சொல்லி அழைத்துள்ளனர். ஆனால் அதற்கு சிறப்பான சிகிச்சை ஆஸ்திரேலியாவிலேயே கிடைப்பதாக கூறியுள்ளார்.

2 ஆண்டுகள் தான் உயிரோடு வாழப்போவதை தெரிந்துக் கொண்டு அதிகாரிகளிடம் பேசி, இறந்த பின் தன் உடலை விமானம் மூலம் சொந்த ஊருக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். பணத்தையும் முன்பே செலுத்தியுள்ளார்.
அதோடு தனது உடலை எடுத்துச்செல்ல 3 லட்சம் ரூபாய் செலவில் சவப்பெட்டியையும் முன்பே ஆர்டர் செய்து வாங்கியுள்ளார். இந்நிலையில் திடீரென உடல்நிலை மோசமான நிலையில், சில மணி நேரங்களில் தான் இறக்க உள்ளதாகக் கூறி ஏற்கனவே செய்திருந்த ஏற்பாடுகள் படி நடக்க நண்பர்களை அறிவுறுத்தியுள்ளார்.
அதைப்போலவே அன்றே உயிரிழந்தார். இச்சம்பவம் பலரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.