வரும் 17ம் தேதி திறக்க இருந்த புதிய தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து... - தெலுங்கானாவில் பரபரப்பு..!

Viral Video Telangana Fire
By Nandhini 1 மாதம் முன்
Report

தெலுங்கானாவில் வரும் 17ம் தேதி திறக்க இருந்த புதிய தலைமைச் செயலகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புதிய தலைமைச் செயலகத்தில் திடீர் தீ விபத்து

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில்,

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் தலைமைச் செயலக கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தலைமைச் செயலக கட்டிடத்தின் தரை தளத்தில் ஏற்பட்ட தீ மளமளவென பரவியது. இந்த தீ விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது.

இது குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் போராடி தீயை அணைத்தனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து, தீ விபத்துக்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் வரும் 17-ம் தேதி அம்மாநில முதலமைச்சர் கே.சந்திரசேகர் ராவ் திறந்து வைக்க திட்டமிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.     

telangana-terrible-fire-accident-new-headquarters



தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.