நான்கு திருமணங்கள் செய்த பெண் தலைமை காவலர்
கணவரை அறைக்குள் போட்டு அடித்து சித்திரவதை செய்த பெண் காவலரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் ஆயுதப்படை பிரிவில் தலைமை காவலராக பணியாற்றுபவர் சந்தியா ராணி (30). மனைவியான தலைமை காவலர் சந்தியா ராணி என்னை கொடுமைப்படுத்துகிறார் என்று சரண் தேஜ் என்பவர் வாட்ஸ்அப் மூலம் ஹைதராபாத் நகர காவல் ஆணையருக்கு புகார் அளித்தார்.
மேலதிகாரிகளின் உத்தரவு அடிப்படையில், தெலுங்கானா போலீசார் ரகசியமாக விசாரணை மேற்கொண்டனர்.
இதுதொடர்பாக, சந்தியா ராணியை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில், அவருக்கு இதற்கு முன்னரே 3 முறை திருமணம் நடைபெற்றது தெரியவந்தது. மேலும், சந்தியா ராணியை ஏற்கனவே திருமணம் செய்து கொண்டவர்களில் இரண்டு பேர் விட்டால் போதும் என்று விவாகரத்து வாங்கி சென்றுவிட்டனர். ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இது குறித்து, பாதிக்கப்பட்ட சந்தியா ராணியின் 4-வது கணவன் சரன் தேஜ் பேசியதாவது -
வேலை தேடி நான் ஹைதராபாத்துக்கு வந்தேன். தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் எனக்கு சந்தியாராணி அறிமுகமானார். அவரைப் பற்றி சரியாக நான் தெரிந்து கொள்ளாத நிலையில், இரண்டு பேரும் காதலித்து வந்தோம்.
அவருடைய வற்புறுத்தல் காரணமாக நாங்கள் இரண்டு பேரும் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பின் தன்னுடைய சுயரூபத்தைக் காட்டத் தொடங்கிய சந்தியாராணி, நீ வேலையை விட்டு விட வேண்டும் என்றும், என்னுடைய மதமான கிறிஸ்தவ மதத்திற்கு மாற வேண்டும் என்றும் என்னை வற்புறுத்தத் துவங்கினார்.
இரண்டுமே நடக்காது என்று நான் கண்டிப்பாக கூறிவிட்ட நிலையில், என்னை பூட்டிய அறைக்குள் போட்டு அடித்து சித்திரவதை செய்தார். அவரிடமிருந்து விடுதலை பெறுவது எனக்கு முக்கியம் கிடையாது. சந்தியா ராணி போன்ற மோசடிக்காரர்கள் நாட்டில் நடமாடவே கூடாது. எனவே அவரைப் பற்றி உண்மை உலகிற்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே நான் போலீசில் புகார் அளித்தேன் என்றார்.