மகள் கண் முன்னே தந்தையை அடித்த போலிஸ் - கதறி துடித்த சிறுமி

police telangana harassment slaps man backlash
By Swetha Subash Dec 07, 2021 11:49 AM GMT
Swetha Subash

Swetha Subash

in குற்றம்
Report

தெலுங்கானாவில் தலைகவசம் அணியாமல் இருச்சக்கர வாகனத்தில் சென்றவரை காவல் உதவி ஆய்வாளர் கன்னத்தில் அரைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாவட்டம் மகபுபாபாத் பகுதியை சேர்ந்த ஸ்ரீனிவாஸ் என்பவர் தனது 8 வயது மகளுடன் அருகில் காய்கறி வாங்குவதற்காக இருச்சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

தலைக்கவசம் அணியாமல் சென்றதர்காக காவலர் ஒருவர் இருச்சக்கர வாகனத்தில் சென்ற ஸ்ரீனிவாஸை தடுத்து நிறுத்தியுள்ளார்.

அப்போது அங்கு வந்த உதவி காவல் ஆய்வாளர் முனிருல்லா ஸ்ரீனிவாஸை அவரது மகள் கண்முன்னே தாக்கியதைக்கண்டு அவரின் 8 வயது மகள் அழத்தொடங்கி.

இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீனிவாஸ் உயர் அதிகாரி ஒருவருடன் இதுகுறித்து விளக்கம் கேட்டு வாக்கு வாதம் செய்யும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

வீடியோவில், “நீங்கள் எனக்கு அபராதம் விதிக்கலாம்..நோட்டீஸ் கொடுக்கலாம் ஆனால் ஏன் அடிக்கவேண்டும்”என உயர் அதிகாரியை பார்த்து கேள்வி எழுப்பும் ஸ்ரீவாஸுக்கு ஆதரவாக பொதுமக்களும் சம்பவ இடத்தில் கூடி ஆதரவு தெறிவித்து வருகின்றனர்.

ஆதரவு தெரிவிக்கும் பொதுமக்களை காவலர்கள் தடுத்து நிறுத்தும் காட்சிகளும் வீடியோ பதிவில் காணமுடிகிறது.

மேலும் நடந்த சம்பவங்களை பார்த்து பயத்தில் இருந்த மகளிடம் “நாம் எந்த தவறும் செய்யவில்லை, அதனால் நீ கவலை பட வேண்டாம்”என ஸ்ரீனிவாஸ் பேசும் வீடியோ பதிவிற்கு பலரும் ஆதரவு தெறிவித்து வருகின்றனர். 

இது குறித்து அந்த சிறுமி,தலைகவசம் போடாமல் வந்ததற்காக தனது தந்தையின் வண்டி சாவியை காவலர் வாங்கியதாகவும் அதனை பற்றி கேட்டபோது உதவி ஆய்வாளர் தனது தந்தையை அரைந்ததாகவும் கூறியிருகிறார்.