பெண்ணின் தலைமுடியை பிடித்து நடுரோட்டில் இழுத்துச் சென்ற போலீஸ் - அதிர்ச்சி வீடியோ!

Viral Video Telangana
By Sumathi Jan 25, 2024 11:00 AM GMT
Report

மாணவியிடம் போலீஸார் செய்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

போராட்டம்

தெலுங்கானா, ஜெய்சங்கர் பூபாலபள்ளி மாவட்டத்தில் விவசாய பல்கலைக்கழகம் உள்ளது. இந்த பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான நிலத்தில் உயர் நீதிமன்றத்திற்கு தேவையான கட்டிடத்தை கட்ட தெலுங்கானா அரசு அனுமதி அளித்துள்ளது.

telangana protest

அதனைத் தொடர்ந்து, இதை கண்டித்து பல்கலைக்கழகத்தின் ஏபிவிபி மாணவர் அணியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், ஏ பி பி இயக்கத்தை சேர்ந்த மாணவ மாணவிகளை போலீசார் விரட்டி அடித்தனர்.

சில்மிஷம் செய்த நடிகர் - முடியை பிடித்து இழுத்து அறைந்த பாகுபலி பட நடிகை!

சில்மிஷம் செய்த நடிகர் - முடியை பிடித்து இழுத்து அறைந்த பாகுபலி பட நடிகை!

அதிர்ச்சி வீடியோ

அப்போது மாணவி ஒருவர் ஓடிய நிலையில், பெண் போலீசார் இரண்டு பேர் ஸ்கூட்டரில் பயணித்தவாறு அவரை விரட்டி சென்று தலைமுடியை பிடித்த படி தரதரவென இழுத்து சென்றனர்.

இதில் அந்த மாணவி கீழே விழுந்து சாலையில் இழுத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி வைரலான நிலையில் பி ஆர் எஸ் கட்சி மேலவை உறுப்பினர் கவிதா உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.