சிறுமி பாலியல் வன்கொடுமை - தேடப்பட்ட நபர் பிணமாக மீட்பு

telangana minorrapeculminate
By Petchi Avudaiappan Sep 16, 2021 05:37 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

தெலங்கானா மாநிலத்தில் 6 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட நபர் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சயாத்பாத் பகுதியில் உள்ள சிங்கரேனி காலனியைச் சேர்ந்த சிறுமி கடந்த வாரம் காணாமல் போனார். அதற்கு அடுத்த நாள் பக்கத்து வீட்டில் படுக்கை விரிப்பில் சுற்றி வைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலம் கைப்பற்றப்பட்டது.

சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்ட வீட்டின் உரிமையாளர் பல்லகொண்ட ராஜு இந்த சம்பவத்திற்கு பின்னர் தலைமறைவானார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில், தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும் காவல்துறை தரப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை ஜனாகான் மாவட்டத்தில் கான்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ரயில் தண்டவாளத்தில் பல்லகொண்ட ராஜு சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இது தொடர்பாக அங்கிருந்த பணியாளர் கூறுகையில், தானும் மற்றொரு தொழிலாளரும் பணியில் ஈடுபட முயன்றபோது, தங்களை பார்த்து ஒருநபர் புதர்களுக்குள் ஒளிந்துகொண்டதாகவும் 10 நிமிடங்கள் கழித்து அவர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டதாகவும் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தெலங்கானாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.