மாப்பிள்ளை தலையில் ஏறி நறுக்கென கொட்டு வைத்து விட்டு ஓடிய குரங்கு... - வைரலாகும் வீடியோ..!

Viral Video Telangana Marriage
By Nandhini Feb 15, 2023 02:11 PM GMT
Report

திருமணத்தில் மாப்பிள்ளை தலையில் ஏறிய குரங்கு ஒன்று நறுக்கென கொட்டு வைத்து ஓடிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

நறுக்கென கொட்டு வைத்த குரங்கு

சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், தெலுங்கானா, மஹபூப் நகரில் மணமகனுக்கும், மணமகளுக்கும் கடந்த 13ம் தேதி திருமணம் நடைபெற்றது. அப்போது திருமணத்தில் புதுமண தம்பதிகள் மாலை மாற்றிக்கொண்டு, தலையில் அரிசியை கொட்டிக்கொள்ளும் சடங்கு நடத்திக்கொண்டிருந்தனர்.

அப்போது, எதிர்பாராத விதமாக அங்கு வந்த குரங்கு ஒன்று மாப்பிள்ளை தலையில் ஏறியது. சட்டென மாப்பிள்ளையின் தலையில் ஒரு கொட்டு வைத்து விட்டு மணமகள் மீது பாய்ந்து தப்பிச்சென்றது. இதனால், புதுமண தம்பதிகள் சற்று நேரத்தில் பதறிப்போய்விட்டனர்.

தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள்... இந்த குரங்கு... ரொம்ப முரட்டு சிங்கிளா இருக்குமோ என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

telangana-marriage-monkey-viral-video