எங்க ஊரில் கிங்பிஷர் பீர் கிடைக்கல - வேதனையில் கலெக்டருக்கு கடிதம் எழுதிய இளைஞர்!
இளைஞர் ஒருவர் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதிய சம்பவம் வைரலாகி வருகிறது.
கலெக்டருக்கு கடிதம்
தெலங்கானா, ஜக்தியல் நகரை சேர்ந்தவர் பி.ராஜேஷ். இவர் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், தனது ஊரில் உள்ள மதுபான கடைகளில் கிங்பிஷர் பிராண்ட் பீர் கிடைக்கவில்லை.

ஆகையால் எங்கள் ஊரில் உள்ள அனைத்து மதுபான கடைகளில் கிங்பிஷர் பிராண்ட் பீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை விடுத்துள்ளார். தொடர்ந்து இது தொடர்பாக வானொலியிலும் தனது புகாரை எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
வைரல்
மேலும் இதுகுறித்து ராஜேஷ் கூறுகையில், எங்கள் ஊரில் உள்ளவர்கள் மலிவான மதுபானங்களை உட்கொள்வதால், உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்படுகின்றனர். இது தொடர்பாக விவாதம் நடத்தப்பட வேண்டும்.
மக்கள் தங்களுக்கு விருப்பமான மதுவை குடிக்க விரும்புவதால், அதை வாங்குவதற்கு தொலைதூர இடங்களுக்கு செல்ல வேண்டியது உள்ளது. இதனால் பல விபத்துக்கள் நடைபெறுகின்றன என தெரிவித்தார். இச்சம்பவம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.