பல லட்சம் செலவில் தனக்குத்தானே கல்லறை கட்டிய மனிதர் - ஏன் தெரியுமா?
ஒரு முதியவர் தான் உயிரோடு இருக்கும்போதே பல லட்சம் செலவில் தனக்குத்தானே கல்லறை கட்டிக் கொண்டது பலரையும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறது.
கல்லறை
தெலங்கானா, லட்சுமிபுரம் என்கிற பகுதியில் வசிப்பவர் இந்திரய்யா(80). இவருக்கு நான்கு பிள்ளைகள் இருக்கிறார்கள். இவர் பல வருடங்கள் துபாயில் கூலி வேலை செய்து விட்டு அதன் பின் இங்கு வந்தார்.

இந்நிலையில் இவர் தனது மரணத்திற்கு பின்பு தனது குடும்பத்தில் யாரும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக 12 லட்சம் செலவு செய்து பளிங்கினால் கல்லறையை கட்டியிருக்கிறார்.
மேலும், தினமும் தனது கல்லறைக்கு வந்து அதை சுத்தம் செய்து அதன் அருகில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுவது போன்ற சில விஷயங்களை செய்து வருகிறார். இதுகுறித்து பேசிய அவர், ‘எனக்கு நானே கல்லறை கட்டிக் கொள்வது வருத்தமாக இருக்கிறது.
என்ன காரணம்?
ஆனாலும் அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.. இறந்த பின் இதுதான் என் வீடாக இருக்கப்போகிறது. இதுவரை ஐந்து வீடுகள் ஒரு பள்ளி மற்றும் தேவாலயம் ஆகியவற்றை கட்டிக் கொடுத்திருக்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
இந்த கல்லறையில், எனது கல்லறையில் மரணத்தை யாராலும் தடுக்க முடியாது.. கடைசியாக போகும்போது யாரும் செல்வத்தை எடுத்துச் செல்ல முடியாது என்கிற வாசகத்தை எழுதியுள்ளார்.