மாணவியை கண்மூடித்தனமாக தாக்கிய வார்டன் - பகீர் சிசிடிவி காட்சிகள்
கல்லூரி மாணவியை வார்டன் கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையாகி உள்ளது.
வார்டன் தாக்குதல்
தெலங்கானா, பூபல்பள்ளியில் உள்ள பட்டியலின மாணவிகள் விடுதியில் வார்டனாக பணிபுரிபவர், பவானி. சம்பவத்தன்று விடுதியில் தங்கி பயிலும் மூன்றாம் ஆண்டு சட்டக்கல்லூரி மாணவி,

தேர்வு முடிந்து இரவு லேட்டாகி விடுதிக்குத் திரும்பி உள்ளார். இரவு 10 மணிக்கு மேல் மாணவி விடுதிக்கு திரும்பிய நிலையில், வார்டன் கத்தி கூச்சலிட்டு மாணவியைக் கண்டித்து தடியால் தாக்க முயன்றார்.
தீவிர நடவடிக்கை
தொடர்ந்து மாணவி மன்னிப்பு கேட்டும், பவானி, மாணவியை கைகளால் சரமாரியாகத் தாக்கி ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். இதை சக விடுதி மாணவிகள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
இந்த வீடியோ தற்போது இந்த வீடியோ இணையத்தில் பரவி பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்நிலையில் விடுதி வார்டன் பவானியை சஸ்பெண்ட் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.