தமிழிசை சௌந்திரராஜனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து..!
புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்திரராஜனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பிறந்து அரசியலில் பல படிகள் உயர்ந்து இன்று தெலங்கானா ஆளுநராக உயர்ந்திருக்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்.தற்போது கூடுதலாக புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் பணியாற்றி வருகிறார்.
புதிய அரசு இன்னும் அமையாமல் இருப்பதால் கொரோனா தடுப்புப் பணிகளை முன்னின்று நடத்தி வரும் தமிழிசை சௌந்திரராஜன், இன்று தனது 60ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

அவருக்கு பாஜக தொண்டர்களும் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, தற்காலிக சபாநாயகர் லட்சுமி நாராயணன் ஆகியோர் நேற்றே ஆளுநர் மாளிகையில் தமிழிசையை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தற்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான (பொ) திருமதி. @DrTamilisaiGuv அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
— M.K.Stalin (@mkstalin) June 2, 2021
சகோதரி தமிழிசை சவுந்தரராசன் அவர்கள் பொதுவாழ்வில் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன்!
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான திருமதி. தமிழிசை அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என்றும், சகோதரி தமிழிசை சவுந்தரராசன் அவர்கள் பொதுவாழ்வில் மேலும் உயரங்களை அடைய வாழ்த்துகிறேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.