பேருந்து நடத்துனர் மீது பாம்பு வீச்சு - குடிபோதையில் பெண் அட்டூழியம்

Snake Telangana
By Karthikraja Aug 09, 2024 07:30 AM GMT
Report

குடிபோதையில் பெண் ஒருவர், அரசுப் பேருந்து நடத்துநர் மீது பாம்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசு பேருந்து

ஹைதராபாத் வித்யாநகரில் நேற்று மாலை நிறுத்தப்படாமல் சென்ற அரசுப் பேருந்தின் பின்புற கண்ணாடி மீது பெண் ஒருவர் மது பாட்டிலை வீசித் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின் பேருந்தை நிறுத்தி இறங்கி வந்த பெண் நடத்துனர் மீது பாம்பை வீசியுள்ளார்.

snake throw on telengana bus

இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வித்யா நகர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சென்ற பேருந்தை நிறுத்துமாறு பெண் சைகை காட்டியுள்ளார். ஆனால் பேருந்து நிற்காததால், கோபமடைந்த அந்த பெண் மதுபான பாட்டிலை வீசியதால், பின்பக்க கண்ணாடி உடைந்தது. 

சாலையே இல்லாமல் வயலுக்கு நடுவே அமைக்கப்பட்ட பாலம் - குழப்பத்தில் கிராம மக்கள்

சாலையே இல்லாமல் வயலுக்கு நடுவே அமைக்கப்பட்ட பாலம் - குழப்பத்தில் கிராம மக்கள்

பாம்பு

உடனே, பேருந்து ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தியதும் பெண் நடத்துனர் கீழே இறங்கி அந்த பெண்ணை திட்டியுள்ளார். நடத்துனர், அவரைப் பிடிக்க முயன்றபோது, ​​அந்தப் பெண் திடீரென தனது பையில் இருந்த பாம்பை வெளியே எடுத்து நடத்துனர் மீது வீசினார். நடத்துனர் பீதியில் ஓடியபோது, ​​பாம்பு கீழே விழுந்து சாலையோரம் மறைந்தது. 

இந்த சம்பவத்தால் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அந்தப் பெண்ணின் கணவர் பாம்புகளைப் பிடிக்கும் தொழில் செய்து வருகிறார். 'நாக பஞ்சமி'யை முன்னிட்டு அந்த பெண் பாம்பை தன்னுடன் எடுத்துச் சென்றார் என காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.