பிணவறையில் உடலை தின்று கொண்டிருந்த நாய்: அதிர்ச்சி சம்பவம்

Telangana
By Fathima Mar 03, 2026 08:04 AM GMT
Report

தெலுங்கானாவின் மெகபூபா பாத் மாவட்டம் நாகசாலாவை சேர்ந்த லாரி டிரைவர் பீமேஸ்வர்(வயது 32).

கடந்த சில நாட்களுக்கு முன் வேலைக்காக சென்றவர் வீடு திரும்பவில்லை, பல்வேறு இடங்களில் தேடியும் பீமேஸ்வர் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று காலை அப்பகுதியில் உள்ள குளத்தில் பிணமாக கிடந்தார்.

உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து வந்த அதிகாரிகள் பீமேஸ்வரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிணவறையில் உடலை தின்று கொண்டிருந்த நாய்: அதிர்ச்சி சம்பவம் | Telangana Dog Eats Body Of Youth In Morgue

பிணவறையில் பீமேஸ்வர் உடல் வைக்கப்பட்டிருந்த நிலையில், நாய் ஒன்று உடலை தின்று கொண்டிருந்துள்ளது.

இதனை நபர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட வைரலானதுடன் பலரும் அதிர்ச்சியடைந்தனர்.

தொடர்ந்து அதிகாரிகள் பீமேஸ்வர் உடலை ஆம்புலன்ஸில் வைத்திருந்து பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

பிணவறையில் வைக்கப்பட்டிருந்த உடலை நாய் தின்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.