கொரோனா நோயாளிகளுக்கு ரூ.10க்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் தம்பதியினர்
தெலங்கானாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10க்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர் தம்பதியினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிக தீவிரமாக உள்ளது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்த காலத்தில் பல துறையை சேர்ந்தவர்கள் உயிரை துச்சமாக எண்ணி மக்களுக்கு சேவையாற்றி வருகின்றனர். அந்த வகையில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெடப்பள்ளி பகுதியை சேர்ந்த ஒரு மருத்துவ தம்பதியினர் கொரோனா நோயாளிகளிடம் இருந்து வெறும் ரூ.10 மட்டுமே கட்டணமாக பெற்று கொண்டு அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இதனை இணையத்தில் பலரும் பாராட்டி வருகின்றனர்.
மேலும் வசதி இல்லாத ஏழை மக்கள் மற்றும் தேவைப்படுவோருக்கு குறைந்த கட்டணத்தில் கோவிட் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் சேவைகளை தொடர் இந்த டாக்டர் தம்பதியர் உறுதியாக உள்ளனர்.