பாலியல் சலுகைகள் கேட்டு பல அழைப்புகள் வந்துச்சு - பிரபல நடிகையின் பகீர் தகவல்
வாய்ப்பிற்காக பாலியல் சலுகைகள் கேட்டதாக பிரபல நடிகை குற்றம் சாட்டியுள்ளார்.
தேஜஸ்வி மடிவாடா
தெலுங்கு திரையுலகில், முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தேஜஸ்வி மடிவாடா. இவர் நட்பதிகாரம் 79 எனும் தமிழ் படத்தில் நடித்திருக்கிறார். தெலுங்கில் மனம், ஹார்ட் அட்டாக், ஸ்ரீமந்துடு, சுப்ரமணியம் பார் சேல் உள்ளிட்ட பல்வேறு படங்களில்
நடித்து முன்னணி நடிகைகளின் பட்டியலில் முதலிடம் பிடித்து வருகின்றார். கடந்த ஆண்டு இவர் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
பாலியல் சலுகை
தற்போது இவர், கமிட்மெண்ட் என்ற படத்தில் நடித்து வருகிறார். அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில், பாலிவுட் சினிமா குறித்து கடுமையான விமர்சனம் ஒன்றைக் கூறியுள்ளார்.
அதில், ’’வாய்ப்புக்காக பாலியல் சலுகைகளை கேட்கும் கலாச்சாரம் அனைத்துத் துறைகளிலும் இருக்கிறது. சினிமாவில் மட்டுமே நடக்கும் விஷயமாக இதைக் கருதுவது தவறானது. பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் என் தோழிகள் கூட இது போன்ற சூழலை எதிர்கொண்டதை அறிவேன்.
casting couch
சினிமாவில் ’casting couch’ என்ற சொற்றொடர் மிகவும் பிரபலமாகிவிட்டது’’ என்று கூறியுள்ளார்.
சினிமாவுக்கு வந்த புதிதில் தனக்கும் பாலியல் சலுகைகள் கேட்டு பல அழைப்புகள் வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.