அந்த நடிகரின் ரசிகர்களால் நான் குடிப்பழக்கத்திற்கு அடிமையானேன் - பிரபல பிக்பாஸ் நடிகை குமுறல்..!
தெலுங்கு நடிகை தேஜஸ்வி மதிவாடா பிரபல நடிகரின் ரசிகர்கள் கொடுத்த தொல்லையால் நான் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
நடிகை தேஜஸ்வி மதிவாடா
தேஜஸ்வி மதிவாடா தெலுங்கில் பிரபல நடிகையாக வலம் வருகிறார். இவர் தெலுங்கில் ‘கெரிந்தா’, ‘மல்லி மல்லி இடி ராணி ரோஜு’ போன்ற படங்களின் நடித்து பிரபலமானார். தமிழில் ‘நட்பதிகாரம் 79’ படத்தில் நடித்துள்ளார்.
மீ டூ வில் புகார்
சமீபத்தில் திரையுலகில் பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக மீ டூ வில் நடிகை தேஜஸ்வி மதிவாடா புகார் தெரிவித்தார். சமீபத்தில் பேட்டி ஒன்றில், சர்வதேச நிறுவனங்களில் பணிபுரியும் என் தோழிகள் இது போன்ற தொல்லைகளை சந்தித்தார்.
சினிமாவில் மட்டும் படுக்கைக்கு அழைப்பது என்பது பிரபலமாகி விட்டது. நானும் பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டேன். நடிக்க வந்த புதிதில் எனக்கு பாலியல் ரீதியாக அழைப்புகள் வந்துக்கொண்டிருந்தன என்று தெரிவித்திருந்தார்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையானேன்
சமீபத்தில் ஒரு பேட்டியில், 2 வருடங்களாக நான் போதை பழக்கத்தால் அவதிப்பட்டு வந்ததாக கூறியுள்ளார். தெலுங்கு பிக் பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டேன். நான் பங்கேற்றபோது, கௌஷலின் ரசிகர்கள் என்னை டார்கெட் செய்ய ஆரம்பித்தனர்.
என்னைப் பற்றி ஆபாசமான செய்திகளை பரப்பி வருகின்றனர். இதனால் நான் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளானேன். பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியே வந்த பிறகும், இதனால் மிகுந்த விரக்தி அடைந்தேன். இதிலிருந்து விடுபட மது குடிக்க ஆரம்பித்தேன். பின்னர், குடி பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டேன்.
மதுப்பழக்கத்துக்கு அடிமையான பிறகு என் உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, நான் கொஞ்சம் கொஞ்சமாக அதிலிருந்து மீண்டு வந்துவிட்டேன் என்றார். தற்போது இது குறித்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.