நிக்காமல் சென்ற தேஜஸ் ரயில் இன்று முதல் தாம்பரத்தில் நின்று சென்றது

Chennai
By Thahir Feb 26, 2023 09:35 AM GMT
Report

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை செல்லும் தேஜஸ் ரயில் இன்று முதல் தாம்பரத்தில் நின்று சென்றது.

தேஜஸ் விரைவு ரயில் வழிப்பாதை 

சென்னை எழுப்பூரில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு திருச்சி, திண்டுக்கல், ரயில் நிலையங்கள் வழியாக மதுரை நோக்கியும் அதே போல மறுமார்க்கமாக மதுரையில் இருந்து மதியம் 3 மணிக்கு புறப்பட்டு சென்னை நோக்கியும் தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.

நிக்காமல் சென்ற தேஜஸ் ரயில் இன்று முதல் தாம்பரத்தில் நின்று சென்றது | Tejas Express Train Stopped At Tambaram

சென்னை எழுப்பூரில் இருந்து திருச்சி, கொடைரோடு வழியாக மதுரைக்கு சென்று வந்தது தேஜஸ் ரயில். ஆனால் திண்டுக்கல்லில் ரயில் நிற்காமல் சென்றது.

இதனிடையே திண்டுக்கல்லிலும் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்த நிலையில், கொடைரோடுக்கு பதிலாக திண்டுக்கல்லில் தேஜஸ் ரயில் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வே அறிவித்தது.

தாம்பரத்தில் நின்று சென்றது

இந்த நிலையில், தாம்பரம் ரயில் நிலையத்திலும் தேஜஸ் ரயில் நின்று செல்ல வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்தது.

நிக்காமல் சென்ற தேஜஸ் ரயில் இன்று முதல் தாம்பரத்தில் நின்று சென்றது | Tejas Express Train Stopped At Tambaram

இந்த நிலையில், சென்னை எழும்பூர்-மதுரை இருமார்க்கத்திலும் செல்லும் (வ.எண்.22671, 22672) தேஜஸ் எக்ஸ்பிரஸ் ரெயில் சோதனை அடிப்படையில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று ரெயில்வே வாரியம் கடந்த இருதினங்களுக்கு முன் அறிவித்தது.

இதனால் ரெயில் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்படி, சென்னை எழும்பூரில் இருந்து இன்று (26.02.2022) காலை 6 மணிக்கு புறப்பட்ட மதுரை செல்லும் தேஜஸ் விரைவு ரெயில் தாம்பரம் ரெயில் நிலையத்தில் நின்று சென்றது.

தாம்பரம் வந்த தேஜஸ் ரெயிலை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இன்றிலிருந்து 6 மாதத்துக்கு சோதனை அடிப்படையில் தாம்பரம் முனையத்தில் நின்று செல்லும் இந்த ரெயில் வருவாய் குறித்து நிரந்தரமாக நின்று செல்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.