பல் பிடுங்கிய விவகாரம் : காவல்துறையினருக்கு அனுமதி மறுப்பு , காரணம் என்ன ?

Crime
By Irumporai Apr 17, 2023 06:45 AM GMT
Report

ஏஎஸ்பி பல்வீர் சிங், பல் பிடுங்கிய விவாகரத்தில் காவல் துறையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது

 பல் பிடுங்கிய விவகாரம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் விசாரணைக்கு அழைத்து செல்லும் நபர்களின் அங்கு பணியில் இருந்த உதவி காவல் கண்காணிப்பாளர் பல்வீர் சிங் மற்றும் மற்ற காவல் அதிகாரிகள் துன்புறுத்தி அவர்களின் பற்களை பிடுங்கிதாக புகார்கள் எழுந்தது. இந்த விவாகரம் தமிழ்நாட்டில் பரபரப்பை கிளப்பிய நிலையில் பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் . ந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணையை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரி அமுதா நியமிக்கப்பட்டுள்ளார்.

பல் பிடுங்கிய விவகாரம் : காவல்துறையினருக்கு அனுமதி மறுப்பு , காரணம் என்ன ? | Teeth Case Investigation Police Not Allowed

காவல் துறையினருக்கு அனுமதி மறுப்பு

விசாரணை கைதிகளின் பற்களை பிடிங்கி துன்புறுத்திய விவகாரம் தொடர்பாக, அடுத்த கட்ட விசாரணை வரும் 17,18 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பாசமுத்திரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,விசாரணை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக காவல் துறையினருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.