கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்; பல்டி அடித்த குற்றவாளி சூர்யா - என்ன காரணம்?

M K Stalin Tamil Nadu Police Tirunelveli
By Thahir Mar 29, 2023 10:10 AM GMT
Report

அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பி பல்வீர்சிங் குற்றவாளிகளின் பற்களை பிடுங்கியதாக கூறப்பட்ட நிலையில் குற்றவாளிகள் திடீரென தங்கள் குற்றச்சாட்டில் இருந்து பின்வாங்கியுள்ளனர்.

கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் 

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங் குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று அவர்களது பற்களை பிடுங்கி சித்திரவதை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

Teeth are not extracted; The culprit is Surya

இதுபற்றி விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் உத்தரவிட்டிருந்தார். சேரன்மாதேவி உதவி ஆட்சியர் முகமது சபீர் ஆலம் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

முதலமைச்சர் அதிரடி உத்தரவு 

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் என அனைத்து தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதிகளின் பற்களை பிடுங்கிய விவகாரத்தில் அம்பாசமுத்திர ஏஎஸ்பி பல்வீர் சிங்கை பணியிடை நீக்கம் செய்து சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

Teeth are not extracted; The culprit is Surya

உதவி ஆட்சியர் தலைமையில் நடக்கும் விசாரணையில் முழுமையான விசாரணை அறிக்கை வந்தவுடன் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் நிலையங்களில் நடைபெறும் மனித உரிமை மீறல்களில் எந்த சமரசமும் அரசு மேற்கொள்ளாது என சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பின்வாங்கிய குற்றவாளி

இந்த நிலையில், சேரன்காதேவி சார் ஆட்சியரிடம் விசாரணைக்கு ஆஜரான பின் வெளியே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய குற்றவாளி சூர்யா போலீசாரால் தான் தாக்கப்படவில்லை என்றும் கீழே விழுந்ததிலேயே தனது பற்கள் உடைந்து விட்டது. பற்கள் உடைந்ததற்கும், காவல்துறைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று குற்றவாளி சூர்யா கூறியுள்ளார்.