இன்ஸ்டாகிராம் பழக்கம்: பிளஸ்-1 மாணவியை சிறை வைத்து பாலியல் வன்கொடுமை - கொடூரம்!
நண்பர் வீட்டில் சிறை வைத்து 11-ம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
நாகர்கோவில் மேல கலுங்கடியை சேர்ந்தவர் வசந்தராஜ் (23). இவருக்கும், ஒரு பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கும் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் நெருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அந்த மாணவியை தனது நண்பர் வீட்டுக்கு அழைத்த வசந்தராஜ், திருணம் செய்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
பின்னர் அந்த மாணவியை தன்வசப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அந்த மாணவியை 3 நாட்களும் அங்கேயே சிறை வைத்து சீரழித்துள்ளார்.
கைது
மேலும், இதுகுறித்து வெளியே கூறக்கூடாது என்றும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து வீடு திரும்பிய மாணவி நடந்த கொடுமைகள் குறித்து தனது தாயாரிடம் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வசந்தராஜை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். கைதான வசந்தராஜ் மீது கடந்த 2020-ம் ஆண்டு ஏற்கனவே ஒரு போக்சோ வழக்கு பதிவாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.