உடல் எடை குறைக்கும் மாத்திரை சாப்பிட்டு இளைஞர் பலி : சோகத்தில் குடும்பத்தினர்

By Irumporai Jan 04, 2023 05:20 AM GMT
Report

உடல் எடையை குறைப்பதற்காக மருந்து வாங்கி சாப்பிட்ட இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல் எடை குறைக்க மாத்திரை

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே சூர்யா(20) என்ற இளைஞர் பால் விநியோகம் செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு தனியார் நிறுவனம் வழங்கிய உடல் எடை குறைக்கும் மாத்திரையினை சூர்யா கடந்த 10 நாட்களாக சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகின்றது.

உடல் எடை குறைக்கும் மாத்திரை சாப்பிட்டு இளைஞர் பலி : சோகத்தில் குடும்பத்தினர் | Teenager Medicine To Lose Weight Died

எமனாக மாறிய மாத்திரை

இவ்வாறான நிலையில் கடந்த 1ம் தேதி இரவு சூர்யாவுக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது, இதனால் அவரது உறவினர்கள் சூர்யாவை சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர், அங்கு சிக்கிச்சை பெற்று வந்த சூர்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல் எடையினை குறைக்க மாத்திரை சாப்பிட்டு வாலிபர் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.