இளம்பெண்ணை போதைக்கு அடிமையாக்கி பாலியல் தொல்லை - 3 பொண்டாட்டிக்காரர் கைது

sexual harrasment mangaluru
By Petchi Avudaiappan Dec 27, 2021 11:55 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in குற்றம்
Report

இளம்பெண்ணை போதைக்கு அடிமையாக்கி பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். 

கர்நாடகா மாநிலம் தட்சிணகன்னடா மாவட்டம் மங்களூரு டவுனில் பிஜாய் பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ பெண் ஒருவர் தனது 22 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர் மங்களூரு விசுவ இந்து பரிஷத் அமைப்பு அலுவலகத்திற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். 

அதில் எனது மகள் கடந்த 4 ஆண்டுகளாக போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளார். எனது மகளுக்கு சூரத்கல் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட காட்டிப்பள்ளா பகுதியை சேர்ந்த தொழில்அதிபர் முகமது ஷெரீப்  என்பவர் போதைப்பொருள் வாங்கி கொடுத்து போதைக்கு அடிமையாக்கி வைத்துள்ளார். மேலும் போதைப்பொருள் கொடுத்து எனது மகளை அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதுபற்றி உருவா போலீசில் புகார் கொடுத்தேன். ஆனால் போலீசார் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே உங்கள் அமைப்பு மூலம் போதையின் பிடியில் சிக்கியுள்ள மகளை மீட்கவும், அவளை போதைக்கு தள்ளிய முகமது ஷெரீப் மற்றும் அவரது நண்பர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார். 

இதனையடுத்து இந்த  சம்பவம் பற்றி விசாரணை நடத்தி முகமது ஷெரீப்பை கைது செய்யும் படி விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிகுமாரிடம் நேரில் கோரிக்கை விடுத்தனர். 9இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சூரத்கல் போலீசாருக்கு, போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார்.

அதன்படி சூரத்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது ஷெரீப்பை கைது செய்தனர். முதற்கட்ட விசாரணையில், அவர் 3 பெண்டாட்டிக்காரர் என்பதும், ஒரு மனைவி கோவாவிலும், மற்றொருவர் மராட்டியத்திலும், இன்ெனாரு மனைவி மங்களூருவில் வசித்து வருவதும் தெரியவந்தது.

இந்த நிலையில் முகமது ஷெரீப், கிறிஸ்தவ பெண்ணின் மகளை போதைக்கு அடிமையாக்கி முகமது ஷெரீப் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும், மேலும் கிறிஸ்தவ பெண்ணுக்கும் அவர் பாலியல் தொல்லை கொடுத்து வந்ததும் தெரியவந்தது.கைதான முகமது ஷெரீப்பிடம் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.