ஒன்றும் அறியாத 5 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் - அதிர்ச்சி சம்பவம்!
ஆந்திராவில் அங்கன்வாடிக்கு சென்ற 5 வயது சிறுமியை வாலிபர் ஒருவர் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
ஆந்திர மாநிலம், செரியல் அடுத்து உள்ள யெல்லதாசூர் நகரை சேர்ந்தவர் 5 வயது சிறுமி. இவர் அதே பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் படித்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் வழக்கம்போல் அங்கன்வாடிக்கு சென்றுகொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 17 வயது வாலிபர் அந்த சிறுமியை வலுக்கட்டாயமாக இழுத்து அவரது வீட்டிற்குள் கடத்தி சென்றார். பின்னர், அந்த சிறுமியை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார்.
புகார்
இந்நிலையில், நீண்ட நேரமாக சிறுமி வீட்டிற்கு வரவில்லை என்று அவரது தாய் தேடி சென்றுள்ளார். அப்பொழுது அந்த சிறுமி அழுதபடி அங்கு நடந்து வந்துள்ளார், அப்பொழுது அவரது தாய் விசாரித்தார்.
அந்த சிறுமி நடந்த சம்பவத்தை தாயிடம் கூறினார், அப்பொழுது அவருக்கு பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் வழிந்ததை கண்டு துடித்து போன தாய் சிறுமியை சித்திப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர், அங்கு உள்ள மருத்துவர்கள் அவரை சோதனை செய்துவிட்டு அவர் கற்பழிக்கப்பட்டதை உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து, அந்த சிறுமியின் தாய் சித்திபேட்டை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து பாசோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.