ஆன்லைன் கேமால் ஆத்திரம் - இளைஞனை கொன்று தீ வைத்து எரித்த சிறுவர்கள் - அதிர்ச்சி!
ஆன்லைன் கேம் பாஸ்வேர்ட் பகிராததால், இளைஞர் ஒருவரை நண்பர்கள் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர் கொலை
மேற்குவங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பாபி தாஸ் (வயது 18). கடந்த 10-தேதி வீட்டை விட்டு வெளியேறிய இவர், மீண்டும் வீட்டிற்கு வரவில்லை.
இதனால் அவரின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், வனப்பகுதி ஒன்றில் எரிந்த நிலையில் பாபியின் உடலை கைப்பற்றினர். இதனையடுத்து தீவிர விசாரணை நடித்திய போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக அவரின் நண்பர்களான 4 சிறுவர்களை கைது செய்தனர்.
சிறுவர்கள் கைது
பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், செல்போனில் விளையாடும் பிரி பையர் என்ற ஆன்லைன் கேமின் பாஸ்வேர்டை கேட்டபோது, அதை பாபி கொடுக்காததால் அவரைக் கொன்று தீ வைத்து எரித்ததாக சிறுவர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து 4 சிறுவர்களையும் கைது செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.