சிறுமிக்கு பாலியல் தொல்லை... மறுத்ததால் வாயில் சானிடைசரை ஊற்றி கொன்ற இளைஞர்கள் - கொடூரம்!
இளைஞர்கள் சிறுமி ஒருவரை சானிடைசர் ஊற்றி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவி
உத்தரப்பிரதேச மாநிலம், பரேலி பகுதியில் 16 வயது சிறுமி 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்துகொண்டிருந்தார், அப்பொழுது மாத் லட்சுமிபூர் பகுதியை சேர்ந்த உதேஷ் ராத்தோர் அந்த சிறுமியை தடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார், இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தந்து 3 நண்பர்களுடன் சேர்ந்து அந்த சிறுமியை பிடித்து வலுக்கட்டாயமாக இழுத்து அவரது வாயில் கிருமிநாசினியான சானிடைசரை ஊற்றியுள்ளனர்.
இதனை பார்த்த அவரது சகோதரர் தடுக்க முயன்ற பொழுது அவரையும் இந்த இளைஞர்கள் தாக்கியுள்ளார். இந்த சம்பவத்தை வீடியோ பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுஉள்ளனர்.
உயிரிழப்பு
இந்நிலையில், அந்த சிறுமி வீட்டிற்கு சென்றதும் மயங்கி விழுந்துள்ளார். அதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அந்த சிறுமியை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு கூறியுள்ளனர்.
ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே அந்த சிறுமி உயிரிழந்தார். மேலும், சிறுமியின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து வந்ததும் அவரது உடலை சாலையில் வைத்து 3 மணிநேரமாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளை பிடித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு குடும்பனத்தினர் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, காவல்துறை 4 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.