பெற்றோர் இல்லாத சிறுமிகளை டார்கெட் செய்து கற்பழித்த வாலிபர் - அதிர்ச்சி தகவல்!
கேரளாவில் வாலிபர் ஒருவர் பெற்றோர் இல்லாத சிறுமிகளை டார்கெட் செய்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல்
கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள கஜக்கூட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கு மலப்புரம் அருகே உள்ள பெரிந்தால் மன்னா வெங்காடு பகுதியைச் சேர்ந்த 20 வயதான கோகுல் என்ற வாலிபருடன் இணையத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்பொழுது கோகுல் காதலிப்பதாக கூறி அந்த சிறுமியை தன் வலையில் சிக்கவைத்து, அவரை பல இடங்களுக்கு காரில் அழைத்து சென்றுள்ளார். அப்பொழுது அவர் பல முறை காரில் வைத்து அந்த சிறுமியை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்துள்ளார், அதனோடு அவரது நகைகளையும் எடுத்திக்கொண்டு தலைமறைவானதாக கூறப்படுகிறது.
விசாரணை
இந்நிலையில், இது குறித்து கஜக்கூட்டம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடி வந்தனர். அப்பொழுது கருநாக பள்ளி பகுதியில் அவர் சிக்கினார். அவரிடம் விசாரணை நடத்தியதில் சிறுமியை பல முறை பலாத்காரம் செய்ததும், நகைகளை பறித்ததும் உறுதியானது.
மேலும், விசாரணை நடத்தியதில் இவர் பெற்றோர் இல்லாத பல சிறுமிகளை இவ்வாறு காதலிப்பதாக கூறி பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து கோகுலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.