என் டெடி பியரை வெட்டுறாங்களே..! பிறந்த நாளன்று கதறி அழுத சிறுவன்!
சீனாவில் பிறந்தநாளுக்கு வெட்டும் பொம்மை கேக்கை பார்த்து அழுத சிறுவனின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவில் உள்ள தைவான் நகரில் சியாங்சியாங் என்ற சிறுவன் தனது 2வது பிறந்த நாளை வீட்டிலேயே கொண்டாடினான். இவனது குடும்பத்தினர், இவன் ஆசையாக வளர்க்கும் டெடி பியர் போன்றே கேக்கையும் வாங்கியுள்ளனர்.
ஆரம்பத்தில் தன் டெடி பியர் அமர்ந்திருப்பது போன்றே மகிழ்ச்சியடைந்த அந்த சிறுவன் கைகளை தட்டி மெழுகுவர்த்திகளை ஊதினான். சிறுது நேரம் கழித்து அவனது தாயார் அந்த கேக்கை வெட்டியதை பார்த்ததும் அவனது தாயை அடித்து அடித்து கதறி அழுதான்.
தான் ஆசையாக வளர்க்கும் டெடி பியரை வெட்டுகிறார்கள் என மனம் தாங்காமல் அந்த பிறந்த நாள் குழந்தை கதறி கதறி அழுதது. இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.