விண்கலத்தில் சிக்கல் - அதிர்வெண் வேறுபாடால் நிலவை நோக்கிய பயணம் ஒத்திவைப்பு!

Japan World
By Jiyath Sep 17, 2023 12:27 PM GMT
Report

அதிர்வெண் வேறுபாடு காரணமாக நிலவை நோக்கிய பயணம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஸ்லிம் விண்கலம்

நிலவை ஆய்வு செய்வதற்காக இந்தியாவின் இஸ்ரோ (ISRO)அனுப்பிய சந்திரயான் 3 விண்கலத்தின் வெற்றியை தொடர்ந்து ஜப்பான் நாடு நிலவை ஆய்வு செய்ய திட்டமிட்டது. அதற்காக ஜப்பானின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ஜாக்ஸா "ஸ்லிம்" என்ற எஸ்எல்ஐஎம் விண்கலத்தை வடிவமைத்தது.

விண்கலத்தில் சிக்கல் - அதிர்வெண் வேறுபாடால் நிலவை நோக்கிய பயணம் ஒத்திவைப்பு! | Technology Failure In Slim Spacecraft I

ஸ்மார்ட் லேண்டர்" என்பதன் சுருக்கமே ஸ்லிம் ஆகும். 200 கிலோ எடை கொண்ட ஸ்லிம் விண்கலத்தில் பிளாஸ்டிக் சோலார் பேனல், மிக நுண்ணிய கேமராக்கள், நேனோ டெக்னாலஜியால் சுருக்கப்பட்ட மின்னணு பாகங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதனையடுத்து கடந்த செப்டெம்பர் 7ம் தேதி ஜப்பான் தனேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து விண்கலம் ஹெச்-2ஏ என்ற ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

ஜாக்ஸா தகவல் 

இந்த விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கினால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்குப் பிறகு, நிலவில் தரையிறங்கிய 5வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

விண்கலத்தில் சிக்கல் - அதிர்வெண் வேறுபாடால் நிலவை நோக்கிய பயணம் ஒத்திவைப்பு! | Technology Failure In Slim Spacecraft I

இந்நிலையில் ஸ்லிம் விண்கலம் அதன் சுற்றுவட்டபாதையை உயர்த்தும் போது, கட்டுப்பாட்டு மையத்துக்கும் தொலைத்தொடர்பு கருவிக்கும் அதிர்வெண் வேறுபாடு காரணமாக பூமியிலிருந்து நிலவை நோக்கிச் செல்லும் பயணமானது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக ஜப்பானின் விண்வெளி மையமான ஜாக்ஸா தெரிவித்துள்ளது. 

You May Like This Video