ஏடிஎம்மில் அடிக்கடி பணம் எடுப்பவரா? மக்களே கவனம்... ஜனவரி 1 முதல் கட்டணம் உயர்கிறது

technology-atm-the-fee-goes-up
By Nandhini Dec 07, 2021 04:15 AM GMT
Report

வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் அதே வங்கி ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட முறைகளை தாண்டி பணம் எடுத்தால், மாதம் ரூ. 20 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

வங்கி ஏடிஎம்களில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட முறை மட்டுமே கட்டமின்றி வாடிக்கையாளர் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட வரம்பைவிட அதிக முறை பணம் எடுத்தால், அதற்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏடிஎம்களில் அதிக முறை பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணம் 2022 ஜனவரி 1-ம் தேதி முதல் மேலும் அதிகரிக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் அதே வங்கி ஏடிஎம்களில் நிர்ணயிக்கப்பட்ட முறைகளை தாண்டி பணம் எடுத்தால், ஒவ்வொரு பண வர்த்தணைக்கும் மாதம் ரூ.20 தற்போது கூடுதலாக வசூலிக்கப்பட்டு வருகிறது.

இனி அடுத்த மாதம் மூலம், இந்த கட்டணம் ரூ.1 அதிகரித்து 21 ரூபாயாக வசூலிக்கப்பட இருக்கிறது. இதனால், வங்கி கணக்கு வைத்திருக்கும் அதே வங்கி ஏடிஎம்களிலிருந்து ஒவ்வொரு மாதமும் 5 பண பரிவர்த்தனைகளை இலவசமாக செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஐந்து முறையை தாண்டிய ஒவ்வொரு பண பரிவர்த்தனைகளுக்கு குறிப்பிட்டுள்ள கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். மேலும், வேறு வங்கி ஏடிஎம்களில் பணம் எடுப்பதற்கான கட்டண விதிமுறைகளிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி உள்ளிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மெட்ரோ நகரங்களில் உள்ள வேறு வங்கி ஏடிஎம்களில் பண பரிவர்த்தனை செய்ய, 3 முறை இலவசமாகவும் அதற்கும் மேற்பட்ட முறை பரிவர்த்தனை செய்தால் கட்டணமும் வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அதே போல, மெட்ரோ அல்லாத வேறு வங்கி ஏடிஎம்களில் பண பரிவர்த்தனை செய்ய, 5 முறை இலவசமாகவும் அதற்கும் மேற்பட்ட முறை பரிவர்த்தனை செய்தால் கட்டணமும் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஏடிஎம்மில் அடிக்கடி பணம் எடுப்பவரா? மக்களே கவனம்... ஜனவரி 1 முதல் கட்டணம் உயர்கிறது | Technology Atm The Fee Goes Up