“கிளிய வளத்து பன்னிகிட்ட குடுத்துட்டீங்க”..நடிகையின் திருமணம் பற்றி கிண்டல்
அண்மையில் தயாரிப்பாளர் ரவீந்தர் - நடிகை மகாலட்சுமி திருமணத்தை பற்றி இணையவாசி செய்துள்ள கிண்டலுக்கு பிக்பாஸ் பிரபலம் காஜல் பதிலடி கொடுத்துள்ளார்.
முதல் திருமணம்
நிகழ்ச்சி தொகுப்பளராக அறிமுகமானவர் மகாலட்சுமி. இவர் பின்னர் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவே சீரியல்களில் நடித்து வந்தார்.
சன் டிவியில் ஒளிப்பரப்பான வாணி ராணி சீரியலின் மூலம் பிரபலமானவர் மகாலட்சுமி. இவர் ஆபிஸ், ஒரு கை ஒசை உள்ளிட்ட முக்கிய சீரியல்களில் நடித்துள்ளார்.
சீரியல்களில் பிசியாக இருந்த வந்த மகாலட்சுமி அணில் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
சில காலம் சேர்ந்து வாழ்ந்த இவர்களுக்கு குழந்தை ஒன்று உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர்.பின்னர் முறைப்படி விவாகரத்து ஆன பின்பு தனது பெற்றோருடன் வசித்து வந்தார்.
தயாரிப்பாளருடன் 2வது திருமணம்
மகாலட்சுமி இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரோடெக்சன் உரிமையாளர் ரவி. இவர் முருங்கைக்காய் சிப்ஸ், கல்யாணம் போன்ற திரைப்படங்கள் தயாரித்துள்ளார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சீரியல் நடிகை மகாலட்சுமியை திருமணம் செய்து கொண்டார். இதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தாலும், விமர்சனங்களும் எழுந்து வருகின்றது.
நடிகை மகாலட்சுமி காசுக்காக தான் அவரை திருமணம் செய்துகொண்டதாக கடுமையாக விமர்சனங்கள் எழுந்த நிலையில்,
இதற்கு பதிலடி கொடுத்த மகாலட்சுமி, ரவீந்தர் தான் தன்னை காதலிப்பதாக முதலில் புரபோஸ் செய்ததாகவும், மனசை பார்த்து தான் அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டதாகவும் தெரிவித்தார்.
நடிகை காஜல் பதிலடி
ரவீந்தர் - மகாலட்சுமி திருமணத்தை விமரசனம் செய்தவர்களுக்கு நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான காஜல் பதிலடி கொடுத்துள்ளார்.
மகாலட்சுமி - ரவீந்தர் திருமணத்தை ட்ரோல் செய்தவர்களின் பதிவுகளை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் காஜல்.
அதில் ஒருவர், “என்னடா கிளிய வளத்து பன்னிகிட்ட குடுத்துட்டீங்க... பணம் பண்ற வேலை” என குறிப்பிட்டிருந்தார்.
மற்றொரு பதிவில், மனசை மனிபர்ஸுகுள்ள ஒழிச்சி வெச்சிருக்காங்களா என ஒரு பெண் பதிவிட்டதை பார்த்து கடுப்பான காஜல், அவருக்கு பதிலடி கொடுத்து பதிவிட்டுள்ளதாவது : “அது எப்டிங்க... நயன் விக்னேஷ கட்டிக்கிட்டாலும் நயன் தான் தப்பு. மஹா ரவிய கட்டிக்கிட்டாலும் மஹா தான் தப்பு. என்ன ஒரு ஆம்பள புத்தி” என விளாசியுள்ளார்.

இலங்கை வரலாற்றில் முதற்தடவையாக அநுரவிற்கு கிடைத்த வெற்றிவீதம் : சுட்டிக்காட்டிய சுமந்திரன் IBC Tamil
