வாயை மூடுங்கள்.. அதைப் பார்த்து கேலி செய்த நபர்கள் - பிரியாமணி கொடுத்த பதிலடி!
தன்னை கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை பிரியாமணி.
பிரியாமணி
இயக்குநர் பாரதிராஜா இயக்கிய 'கண்களால் கைது' செய் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பிரியாமணி. அதனைத் தொடர்ந்து 'அது ஒரு கனாக்காலம்' என்ற படத்தில் நடித்தார்.

ஆனால் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக அவர் நடித்த பருத்திவீரன் என்ற படம் ஹிட் அடித்தது. அந்த படத்தில் பிரியாமணியின் நடிப்பு ரசிகர்களை ஈர்த்தது. அவர் வெளிப்படுத்திய சிறப்பான நடிப்பு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்தது.
தொடர்ந்து மலைக்கோட்டை, தோட்டா, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அண்மையில் இயக்குநர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பதிலடி
இந்நிலையில் தனது உடல் நிறத்தை வைத்து கேலி செய்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார் பிரியாமணி. இதுகுறித்து அவர் கூறியதாவது "நான் சமூக வலைத்தளத்தில் மேக்கப் இல்லாமல் எனது புகைப்படங்களை பகிர்ந்தேன்.

அதை பார்த்து பலர் நான் கருப்பாக இருக்கிறேன். மாநிறத்தில் இருக்கிறேன் என்று கேலி செய்தனர்” ஆண்டி மாதிரி இருக்கிறேன்" என்றும் பேசினர். அப்படி இருந்தால்தான் என்ன? இப்போது இல்லை என்றாலும் கூட நாளை உங்களுக்கும் வயதாகி முதியவராகத்தான் போகிறீர்கள்.
எனக்கு இப்போது 38 வயது ஆகிறது. இந்த வயதிலும் நான் கட்டுக்கோப்பான தோற்றத்தில்தான் இருக்கிறேன். நான் எப்படி இருக்கிறேனோ அதில் எனக்கு மகிழ்ச்சிதான். எனவே உங்கள் வாயை மூடுங்கள்” என்றும் கூறியுள்ளார்.
22வது அரசியலமைப்பு திருத்தம் வேண்டாம் : மகாநாயக்கர்களை வைத்து சுஜீவ பகிரங்கப்படுத்திய அறிக்கை IBC Tamil
ஈரானின் கொலை அச்சுறுத்தல் : உணவு ட்ரக்கில் மறைந்திருந்து சிறிய விமானத்தில் அமெரிக்கா பறந்த ட்ரம்ப் IBC Tamil