கண் இருந்தால் கண்ணீர் வரும்., எந்த வருத்தமும் இல்லை - கேஎஸ் அழகிரி

election dmk alagiri eye
By Jon Mar 06, 2021 10:42 AM GMT
Report

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தற்போது வரை பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி கேட்கின்ற இடங்களை கொடுக்க திமுக தயங்குவதாக பேசப்படுகிறது. இதற்கிடையே பேச்சுவார்த்தை நடத்த வந்த காங்கிரஸ் தலைவர்களை திமுகவினர் மரியாதை குறைவாக நடத்தியதாக செய்திகள் வெளியானது.

இதன் காங்கிரஸ் கூட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி கண்ணீர் விட்டு அழுததாக செய்திகள் வெளியானது. சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களிடம் இன்று நேர்காணல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, கண் இருந்தால் கண்ணீர் வரும் என நேற்று நடைபெற்ற செயற்குழு ஆலோசனை கூட்டத்தில் கண்கலங்கியது குறித்து விளக்கமளித்துள்ளார்.

திமுகவுடன் காங்கிரஸ் கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ளது, ஏன் காலதாமதம் என்ற கேள்விக்கு, இது காலதாமதமே இல்லை, தற்போது தான் நேர்காணல் நடைபெறுகிறது எனக் கூறியுள்ளார்.

மேலும், ஆலோசனையில் எந்த வருத்தமும் இல்லை. காங்கிரஸ் வேட்பாளருக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. இந்த நேர்காணல் முடிந்த பிறகு திமுகவுடனான தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.