வெற்றி கொண்டாட்டத்தில் முதல்வரை சந்தித்த நடிகர் சங்கத்தினர்
நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றிக்குப் பின் இன்று முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர் பாண்டவர் அணியினர்.
கடந்த 2019-ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், பாக்யராஜ் தலைமையிலான சங்கரதாஸ் சுவாமி அணியும் போட்டியிட்டனர்.
ஆனால் வாக்காளர்கள் எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டதால் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கால் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது.
இதையடுத்து 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று வாக்குகள் எண்ணப்பட்டது. அதில் நாசர் தலையிலான பாண்டவர் அணி வெற்றி பெற்றது.
தற்போது தேர்தலில் வெற்றி பெற்றதை அடுத்து விஷால் குழுவினர் தமிழக முதல்வர் முக ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இ
துகுறித்து முதல்வர் சார்பில் அறிக்கை வெளியிட்டுள்ளனர். அறிக்கையில், "தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (22.3.2022 ) தலைமைச் செயலகத்தில், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் தலைவர் திரு . நாசர், பொதுச் செயலாளர் திரு . விஷால்,
பொருளாளர் திரு. கார்த்தி, துணைத் தலைவர் திரு. பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் திரு. சரவணன், திரு. மனோபாலா, திரு. தளபதி தினேஷ், திரு. காளிமுத்து, திரு. வாசுதேவன் , திரு. அஜய்ரத்தினம் , திரு.ஜெரால்டு,
திருமதி லலிதாகுமாரி, திரு. ஹேமச்சந்திரன், திருமதி சோனியா, செல்வி கோவை சரளா, திருமதி லதா, திரு. ஸ்ரீமன், திரு. சவுந்தர், வழக்கறிஞர் திரு. கிருஷ்ணன், பொது மேலாளர் திரு. பாலமுருகன் ஆகியோர் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்கள்.
இந்த நிகழ்வின்போது, சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் உடனிருந்தார்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.