பாண்டியா இல்லாமல் அணி நன்றாக உள்ளது; பெரிய இழப்பெல்லாம் இல்லை - ஆஸி. முன்னாள் வீரர் அதிரடி!

Hardik Pandya Cricket IPL 2024
By Swetha Mar 12, 2024 01:25 PM GMT
Report

பாண்டிய அணியிலிருந்து வெளியேறியது பெரிய இழப்பு இல்லை என ஆஸ்திரேலிய முன்னாள் வீரரான பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் 2024

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் வரும் 22-ம் தேதி தொடங்கவுள்ளது. இதுவரை நடந்து முடிந்த தொடரில் அதிகபட்சமாக சென்னை மற்றும் மும்பை அணிகள் தலா 5 முறை கோப்பைகளை வென்றுள்ளன.

பாண்டியா இல்லாமல் அணி நன்றாக உள்ளது; பெரிய இழப்பெல்லாம் இல்லை - ஆஸி. முன்னாள் வீரர் அதிரடி! | Team Is Fine Without Pandya Former Aussie Star

ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியில் 2022-ல் குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வென்றது. இந்நிலையில், வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் இந்த வருடம் ரோகித் சர்மாவை கழற்றி விட்டு ஹர்திக் பாண்டியாவை புதிய கேப்டனாக அறிவித்தது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

பாண்டியா இல்லாமல் அணி நன்றாக உள்ளது; பெரிய இழப்பெல்லாம் இல்லை - ஆஸி. முன்னாள் வீரர் அதிரடி! | Team Is Fine Without Pandya Former Aussie Star

மேலும், வருங்காலத்தை கருத்தில் கொண்டே ஹர்திக் பாண்டியாவை தங்களுடைய கேப்டனாக நியமித்ததாக மும்பை நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனையடுத்து, பாண்டிய இல்லாமல் குஜராத் அணி பெரும் பின்னடைவை சந்திக்கும் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

முடிவுக்கு வந்த ரோஹித் ஷர்மாவின் பதவி: புதிய கேப்டனை அறிவித்த மும்பை இந்தியன்ஸ்

முடிவுக்கு வந்த ரோஹித் ஷர்மாவின் பதவி: புதிய கேப்டனை அறிவித்த மும்பை இந்தியன்ஸ்

சரியானவர் அல்ல

இதுதொடர்பாக  ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் பேசியதாவது, "அப்படியெல்லாம் இல்லை. பாண்டியா இல்லாமல் அணி நன்றாகத்தான் உள்ளது.

பாண்டியா இல்லாமல் அணி நன்றாக உள்ளது; பெரிய இழப்பெல்லாம் இல்லை - ஆஸி. முன்னாள் வீரர் அதிரடி! | Team Is Fine Without Pandya Former Aussie Star

ஹர்திக் பாண்டியாவின் இழப்பு பெரிய இழப்பெல்லாம் ஒன்றுமில்லை. அவர் மிடில் ஆர்டரில் ஒரு தரமான ஆல்ரவுண்டர் என்பது சரிதான். ஆனால் அவர் இடத்தை நிரப்பிவிடுவார்கள். குஜராத் அணியில் நல்ல பவுலிங் உள்ளது.

ஹர்திக் பாண்டியா டாப் ஆர்டரில் இறங்கினார். ஆனால் அவர் அந்த இடத்திற்கு சரியானவர் அல்ல. அவருக்கு அந்த ரோல் பொருத்தமாக இல்லை. எனவேதான் கூறுகிறேன் ஹர்திக் பாண்டியா இல்லாமல் குஜராத் டைட்டன்ஸ் நன்றாக உள்ளதென்று.

பாண்டியா இல்லாமல் அணி நன்றாக உள்ளது; பெரிய இழப்பெல்லாம் இல்லை - ஆஸி. முன்னாள் வீரர் அதிரடி! | Team Is Fine Without Pandya Former Aussie Star

மும்பை இந்தியன்ஸ் அணி அவரைப் பின்னால் இறக்கி ஆல்ரவுண்டராகப் பயன்படுத்தும். அது அவர்களுக்குச் சரியாக இருக்கும். பின் வரிசையில் இறங்குவதுதான் பாண்டியாவுக்கு பொருந்தும். மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் சிறப்பாக ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.