சோதனை மேல் சோதனை: இந்திய அணியில் மேலும் ஒருவருக்கு கொரோனா- கடைசி போட்டி நடப்பதில் சிக்கல்?
இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உள்பட மூன்று பயிற்சியாளர்கள் கொரோனா தொற்று உறுதியானதால் அவருடன் தொடர்பில் இருந்த மூவரும் மருத்துவச் சிகிச்சைக்காகத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.
பிசியோதெரபிஸ்ட் நிதின் படேலுக்கு கொரோனா இல்லை என்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 10 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவதால் ரவி சாஸ்திரி, பரத் அருண், ஸ்ரீதர் ஆகிய மூவரும் மான்செஸ்டர் டெஸ்டில் பங்கேற்க மாட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்திய அணி ஊழியர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது.
கடைசி டெஸ்ட் மான்செஸ்டரில் நாளை தொடங்கவிருக்கிறது. இதற்காக வீரர்கள் பயிற்சி மேற்கொண்டு வந்தனர். இச்சூழலில் திடீரென்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனால் பயிற்சி உடனடியாக ரத்தானது. நாளை போட்டி நடைபெறுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசி போட்டி ரத்தனாலும், டிரா ஆனாலும் இந்தியாவுக்கே சாதகம். தோற்றால் 2-2 என்ற சமநிலை அடைந்து கோப்பையை இரு அணிகளும் பகிர்ந்துகொள்ளும்.