இந்திய அணியில் கழட்டி விடப்பட்ட மிக முக்கிய வீரர் - கடுப்பான ரசிகர்கள்
இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரில் மிக முக்கிய வீரர் சேர்க்கப்படாதது ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது,
தென்னாப்பிரிக்காவுடன் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இந்திய அணி அடுத்ததாக ஜனவரி 19ம் தேதி முதல் ஒருநாள் தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணியை பிசிசிஐ நேற்ற முன்தினம் அறிவித்தது.
அதன்படி ரோகித் சர்மாவின் உடல்நிலையில் சீராக ஆகாததால் தொடரில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக புதிய கேப்டனாக கே.எல். ராகுலும், துணை கேப்டனாக ஜஸ்பிரித் பும்ராவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் சேர்த்து மொத்தம் 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது.
இளம் வீரர்கள் ருதுராஜ் கெயிக்வாட், சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் என பலரும் அணியில் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த பட்டியலில் சத்தமே இல்லாமல் ஒரு முக்கிய வீரர் கழட்டிவிடப்பட்டுள்ளார். தென்னாப்பிரிக்க டெஸ்ட் போட்டியில் 200வது விக்கெட்டை எடுத்து அசத்திய முகமது ஷமி தான் அது.
முகமது ஷமி தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார்.முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களும், 2வது இன்னிங்ஸில் 3 விக்கெட்களும் என எடுத்து அசத்தினார். இந்த சூழலில் அவரை வெளியே உட்காரவைப்பது இந்திய அணிக்கு நல்லதா என ரசிகர்கள் குழம்பியுள்ளனர். ஆனால் தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் முகமது ஷமி விளையாடி வருவதால், அவருக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நேரத்தை பயன்படுத்தி பிரஷித் கிருஷ்ணா, தீபக் சாஹர் போன்ற இளம் வீரர்களை களமிறக்கி பார்க்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.