பாகிஸ்தானை பார்த்து இந்தியா பந்துவீச்சு தாக்குதலை நடத்துகிறது... - பாக். முன்னாள் வீரர் பேட்டி..!

Cricket Pakistan India Umran Malik
By Nandhini Feb 03, 2023 11:33 AM GMT
Report

பாகிஸ்தானை பார்த்து இந்தியா பந்துவீச்சு தாக்குதலை நடத்துகிறது என்று பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா வெற்றி

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 1ம் தேதி நடைபெற்றது. இப்போட்டியில் 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இப்போட்டியின் 20 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 234 ரன்கள் குவித்தது. இதனையடுத்து, 235 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய நியூசிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆரம்பத்திலேயே திணறி நிலைகுலைந்தனர்.

இப்போட்டியின் முடிவில் நியூசிலாந்து அணி 12.1 ஓவர்களில் வெறும் 66 ரன்னில் சுருண்டு விழுந்தது. இதனால், இந்தியா அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது.

team-india-pakistan-umran-malik-ramiz-raja

பாக். வீரர் ரமீஸ் ராஜா பேட்டி

இந்நிலையில், இந்திய அணி பந்துவீச்சு பாகிஸ்தானை பார்த்து வடிவமைத்துள்ளதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் ரமீஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில்,

இந்திய அணி பாகிஸ்தானை பார்த்து அவர்களது பந்துவீச்சு தாக்குதலை வடிவமைத்திருக்கிறார்கள். இந்திய கிரிக்கெட் வீரர் உம்ரான் மாலிக்கிடம், ஹாரிஸ் ரால்ப் போல் வேகம் இருக்கிறது. பாகிஸ்தானின் ஷாகின் அப்ரியை போல் இடது கையால் அர்ஷ்தீப் சிங் தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

மிடில் ஓவர்களில் பாகிஸ்தானின் வாசிம் ஜூனியர் எவ்வாறு பந்துவீசுகிறாரோ அதே போல் அங்கு பாண்ட்யா வீசி வருகிறார். பாகிஸ்தானை விட இந்திய அணியின் சுழற்பந்து வீச்சு அருமையாக இருக்கிறது.

இரு அணிகளும் விளையாடும் போதெல்லாம் பாகிஸ்தான் அணி எதை மேம்படுத்த வேண்டும் என்பதை நான் பார்த்து வருகிறேன் என்றார்.