'ஜெய் ஸ்ரீராம்' என ஆசிரியையுடன் ஆடிப் பாடிய பள்ளி மாணவர்கள் - வைரலாகும் Video!
அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை கொண்டாடும் வகையில், பள்ளி மாணவர்கள் ஆசிரியை ஒருவருடன் 'ஜெய் ஸ்ரீராம்' பாடல் பாடி நடனமாடியுள்ளனர்
ராமர் கோவில்
உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேகம் நாளை (ஜனவரி 22) நடைபெறவுள்ளது.
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.
ஜெய் ஸ்ரீராம் நடனம்
இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழாவை கொண்டாடும் வகையில், பள்ளி மாணவர்கள் ஆசிரியை ஒருவருடன் 'ஜெய் ஸ்ரீராம்' பாடல் பாடி நடனமாடியுள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவ மாணவிகள், ‘ஜெய் ஸ்ரீராம்... ஜெய் ஸ்ரீராம்...’ என ஆசிரியையுடன் ஆடிப் பாடியுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.