தோல்வியில் முடிந்த பேச்சுவார்த்தை...தொடரும் போராட்டம்- ஆசிரியர்கள் அறிவிப்பு!!

Tamil nadu DMK Chennai Anbil Mahesh Poyyamozhi
By Karthick Oct 02, 2023 11:33 AM GMT
Report

இடை நிலை ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களிடம் அன்பில் மகேஷ் மேற்கொண்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

ஆசிரியர்கள் போராட்டம்

தமிழகத்தில் அரசுப் பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம், காலிப் பணியிடங்களை நிரப்புவது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து செப்டம்பர் 28-ஆம் தேதி முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் 4 ஆயிரத்திற்கும் அதிகமான ஆசிரியர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

teachers-protest-will-continue-in-chennai

நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட 180 பேருக்கு உடல்நலம் பாதிப்படைந்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள 3 பிரிவு ஆசிரியர்களின் சங்க பிரதிநிதிகளுடன் நேற்று பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், நிதித்துறை கூடுதல் செயலாளர், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ஆகியோர் தலைமைச் செயலகத்தில் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

போராட்டம் நீடிக்கும்

இந்நிலையில் தான், இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஷ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அமைச்சர் அன்பில் மகேஷ் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

teachers-protest-will-continue-in-chennai

பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், விரைந்து முடிவு எட்டப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாக தெரிவித்த ஆசிரியர்கள் ஆனால் இறுதி முடிவு எட்டும் வரை போராட்டம் நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.