50 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் - ஒரு பேஸ்புக் பதிவால் சிக்கினார்...!
50க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் ஒரு பேஸ்புக் பதிவால் சிக்கினார். கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியைச் சேர்ந்தவர் கே.வி.சசிகுமார்.
இவர் கடந்த 38 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி அன்று ஓய்வு பெற்றார். மார்ச் 31 ஆம் தேதி பள்ளியின் சார்பில் அவருக்கு வழங்கிய பிரியாவிடை நிகழ்ச்சி குறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
இதனிடையே மஞ்சேரியைச் சேர்ந்த சசிகுமாரின் முன்னாள் மாணவர் குமார் என்பவர்,கே.வி.சசிகுமார் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னிடம் பயின்ற மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக முகநுாலில் பதிவிட்டு அதிரச்சியை கிளப்பினார்.
அவரின் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதை தொடர்ந்து .மாணவிகள் பலரும் சசிகுமாரால் தாங்களும் பாதிக்கப்பட்டு உ்ளளதாக தெரிவித்தனர்.
இதையடுத்து 50க்கும் மேற்பட்ட மாணவிகள்,சசிகுமாரால் பாதிக்கப்பட்டதாக புகார் வந்தது. இதனால் கடும் அதிர்ச்சி அடைந்தனர் கல்வித்துறை அதிகாரிகள்.
இதையடுத்து அவர் மீது மலப்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சசிகுமார் மீதான புகார் குறித்து உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும் படி கேரள கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தன் மீது வழக்குப்பதியப்பட்டுள்ளதை அறிந்த சசிகுமார் தலைமறைவானார். காவல்துறையினர் சசிகுமாரை தேடி வந்தனர்.நேற்றிரவு சசிகுமார் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
வழக்கில் சசிகுமார் கைதாகியுள்ளதால் தனது கவுன்சிலர் பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.